பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
Centre for Development of Tamil in Engineering and Technology
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.
Tamil in Engineering
தமிழர் மரபு
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கானப்
பாடப் புத்தகம்
அண்ணா பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்களால் எழுதப்பட்டது
நூலின் சிறப்பம்சங்கள்:
-
மாணவர்கள் இந்தப் பாடத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி எளிமையான வாக்கியங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
-
தேவைக்கேற்ப ஆங்காங்கே படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் பாடத்தை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள துணை புரியும்.
-
தொகுப்புரையின் இறுதியில் துணைநூற் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
-
தேர்வின் எளிமை கருதி சிறு வினா தொகுப்பும் பெருவினா தொகுப்பும் ஒவ்வொரு அலகின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம்
ISBN : 978-81-955996-1-4
பொறியியல் பாடப்புத்தகங்களின் வெளியீடுகள் மற்றும் விற்பனை
பொறியியல் மற்றும் அறிவியல் தொடர்பான பத்து நூல்களை அந்தந்தத் துறை வல்லுநர்களால் தமிழில் எழுதப்பெற்று மத்திய அரசு பொறியியல் தொழில்நுட்ப மையம் வாயிலாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசால் வெளியிடப்பட்ட மேற்கண்ட அனைத்துத் தமிழ்ப் பொறியியல் நூல்களும் பல்வேறு பொறியியல் கல்லூரி நூலகங்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளால் வாங்கப்பட்டுள்ளன.
புத்தகங்களின் பட்டியல்:
-
திண்மவிசையியல்
-
கணிப்பொறி இயலுக்கு அறிமுகம்
-
பொருள்களின் அறிவியல்
-
பொறியியலின் வரைவியல்
-
அடிப்படை மின்னியல்
-
தொலைத் தொடர்பில் சாலிட்டான்கள்
-
படிக வளர்ச்சி கோட்பாடுகளும் செயல்முறைகளும்
-
தண்ணீர் நன்னீர்
9. ஆய்வுச் சுருக்கங்கள்