top of page
gold.jpg

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அறிவியல் தமிழின் வளா்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு மேனாள் துணைவேந்தா் பேராசிரியா் டாக்டா் வா.செ.குழந்தைசாமி   அவா்களால் 1986 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழத்தில் துவங்கப் பெற்றதுதான்“வளா் தமிழ் மன்றம்“. பிறகு 2000 ஆம் ஆண்டில் தன்னாட்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டு "பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்" என மறுபெயரிடப்பட்டது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்துவதே இம்மையத்தின் தலையாய பணியாகும்.

 நோக்கங்கள்
  • விரிவுரைகள், பாடப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள்,  மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தமிழில் எழுத / மொழிபெயர்க்க  பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை ஊக்குவித்தல்.

  • அறிவியல், பொறியியல் தொழில்நுட்பங்களை தமிழில் எழுத மற்றும் பேச மாணவர்களை  ஊக்குவித்தல்.  

  • தமிழ் இலக்கியத்தில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் பற்றிய அறிவை ஆராய்ந்து வெளிக்கொணர்தல்.

  • தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் அறிவை தமிழுக்குப் பயன்படும் வகையில் செய்ய அனைத்து உதவிகளையும் செய்தல்.

  • அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவித்தல்.

மேற்கொண்ட பணி 
  • தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி அவற்றின் வாயிலாக வாழ்வியல் ஒழுக்க நெறிகளை மாணவா்களுக்கு உணா்த்துவது.

  • மாணவா்களுக்கிடையில் பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றுக்கூடாக அவா்களின் தமிழ் அறிவின் பார்வையை விசாலப்படுத்துவது.

  • பொறியியல் தொழில்நுட்ப நுணுக்கங்களை தமிழில் பேசுதல் மற்றும் எழுதும் திறனை பல்வேறு பயிற்சிகள் மற்றும் போட்டிகள் வாயிலாக மாணவர்களிடையே ஊக்குவிப்பது.

  • செந்தமிழ் விழி எனும் “களஞ்சியம்“ தமில் இதழ் வாயிலாக ஆய்வு சுருக்கங்களையும் ,ஆய்வுக் கட்டுரைகளையும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடுதல்.

  • தமிழில் உருவாக்கப்பட்ட அறிவு வளங்களை ஒருங்கிணைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை தமிழில் கொண்டு சேர்க்க தமிழ் மொழியில் இணைய அடிப்படையிலான கற்றல் பொருட்களை உருவாக்கி வழங்குதல் மற்றும் தமிழ் மொழியில் கல்வித் திட்டங்களை வழங்குதல்

  • கல்வியாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், தொழில்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலைப்பின்னலை நிறுவுதல்.

bottom of page